வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு…தேர்தல் ஆணையம் போலீஸில் புகார்…!!
வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என கூறிய சையத் சுஜா மீது டெல்லி காவல்துறையில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.
சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யமுடியும்.கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் எனக்கு ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது.ஹேக் செய்யப்படும் என்பது தவறான தகவல் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தவறான வதந்திகளை பரப்பிய சையத் சுஜா மீது டெல்லி போலீஸ்_சில் புகார் அளித்துள்ளது.