22வது மாடி சுவரில் சிக்கிய மனநலம் குன்றிய முதியவர்.! பத்திரமாக மீட்ட தீயணைப்பு படைவீரர்.!
காண்டிவாலியில் உள்ள 22 வது மாடி கட்டிடத்தின் சுவரில் சிக்கிய மனநலம் குன்றிய முதியவர் பத்திரமாக மீட்பு.
மும்பையில் உள்ள காண்டிவாலியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், கட்டிடத்தின் 22 வது மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். காண்டிவாலி பகுதியில் உள்ள 32 மாடி கட்டிடத்தில், 70 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் அதன் 22 வது தளத்தில் உள்ள 6 அடி சுவற்றில் இறங்கி, அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் முதியவரை மீட்பதற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி முதியவரை பாதுகாப்பாக மீட்டனர்.
தீயணைப்பு படையினர் கூறுகையில், “மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் சுமார் 4 அடி பாதுகாப்பு சுவரில் ஏறி, 32 மாடி கட்டிடத்தின் 22 வது தளத்தில் உள்ள சுமார் 6 அடி ஆழத்தில் பாராபெட் சுவரில் இறங்கியுள்ளார்” என்று கூறினர். மீட்கப்படும்போது அவர் மயக்க நிலையில் காணப்பட்டதாக மீட்புத்துறைனர் மேலும் கூறினர்.
WATCH: 70-year-old man with intellectual disability rescued from parapet wall of 22nd floor of #Kandivali highrise.#Mumbai pic.twitter.com/JyOLikuyTk
— Free Press Journal (@fpjindia) March 5, 2023