Categories: இந்தியா

உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது..! முதல்வர் நவீன் பட்நாயக்

Published by
செந்தில்குமார்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்கள் காப்பாற்றியதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 288 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டில் உள்ள மக்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை அடுத்து இந்த விபத்து மனித தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கூறி மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாக சிபிஐ சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ரயில் மோதிய விபத்தில் சிக்கிய 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளன, மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு மற்றும் இரத்த தானத்திற்கான நீண்ட வரிசையில் நின்ற என் மக்களைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!

புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

5 minutes ago

“பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை”…அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை! தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி ட்வீட்?

சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…

14 minutes ago

ஹாலிவுட்டில் நம்ம ஊரு மண்டேலா! யோகி பாபுவுக்கு அடித்த பம்பர் வாய்ப்பு!

சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…

35 minutes ago

‘சூறாவளி புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்’! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…

1 hour ago

கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…

2 hours ago

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…

2 hours ago