உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த டுவைஜிங் (dwijing )திருவிழா…!!
அசாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தில் உள்ள ஏய் நதிக்கரையில் கடந்த 3 ஆண்டுகளாக டிவைஜிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா சுமார் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.இதில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் அஸ்ஸாம் மாநில பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி,பாட்டு, பாரம்பரிய குத்துச்சண்டை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதால் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.