நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை !

Default Image

கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொரோனா  தடுப்பூசி நடைமுறைக்கான  ஒத்திகை நாளை மேற்கொள்ளப்படுகிறது.இது அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், குறைந்தது மூன்று இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சில மாநிலங்களையும், போக்குவரத்து சிக்கல் உள்ள மாவட்டங்களையும் இந்த ஒத்திகைக்குப் பயன்படுத்த உள்ளது. ஒவ்வொரு பரிசோதனை இடத்திலும், பொறுப்பு மருத்துவ அதிகாரி, 25 பரிசோதனைப் பயனாளிகளை (சுகாதாரப் பணியாளர்களை) அடையாளம் காண வேண்டும். இவர்களின் விவரங்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Weather - Hemant Soren
Champions Trophy 2025 - PCB Head
AAP Leader Arvind Kejriwal
This week ott release
INDvsAUS , 2nd Test
Congress MLA EVKS Elangovan
Pradeep John