அழுது கொண்டிருந்த தனது குழந்தைக்கு ஐந்து ரூபாய் கொடுக்குமாறு மனைவி கேட்டதை அடுத்து குழந்தையின் தந்தை ஆத்திரத்தில் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா என மாவட்டத்தில் உள்ள லொனோரா எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய விவேக் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் விவேக்குக்கு அதிகளவில் குடிப்பழக்கம் இருப்பதாகவும், இதனால் அடிக்கடி மனைவியிடம் இவர் சண்டையிடுவார் எனவும் கூறப்படுகிறது. இவரது குழந்தை ஐந்து ரூபாய் இனிப்பு வகையான கஜா எனும் ஒரு திண்பண்டத்தை கேட்டு அழுதுள்ளது. இதனை அடுத்து விவேக்கின் மனைவி அவரிடம் சென்று குழந்தை அழுகிறது ஐந்து ரூபாய் கொடுங்கள் என கேட்க குடிகார கணவனாகிய விவேக் ஆத்திரத்தில் ஐந்து ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார்.
அதன் பின் கோவத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை தரையில் தூக்கி அடித்துளளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற தாய் எவ்வளவு போராடினாலும் தலையில் அடிபட்டதால் குழந்தை அவ்விடத்திலேயே உயிரை இழந்தது. தனது கணவரின் செயலால் மனமுடந்த குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விவேக்கை கைது செய்துள்ளனர். குடித்துவிட்டு என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தனது குழந்தையையே கொன்றுள்ள விவேக்கின் செயல் அருகில் உள்ளவர்களை கலங்க வைத்துள்ளது.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…