மனைவியின் நகைக்களை விற்று ஆட்டோவை கோவிட் அம்புலன்ஸாக மாற்றிய ட்ரைவர்…!

Default Image

மனைவியின் நகைக்களை விற்று ஆட்டோவை கோவிட் அம்புலன்ஸாக மாற்றிய ட்ரைவர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் ஜாவித் கான் என்பவர் தனது ஆட்டோவை கோவிட் நோயாளிகளை இலவசமாக கொண்டு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் ஆக மாற்றி உள்ளார். அவர் அதனுடன் ஆக்சிஜனையும் இணைத்து இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறார்.

ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரை சம்பாதிக்கும் அவர், தனது மனைவியின் நகைகளை விற்று இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதை செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் பார்க்கிறேன்.

இதற்காக நான் என் மனைவி மனைவியின் நகையை விற்று ஆக்சிஜனை நிரப்பும் இடத்தில் வரிசையில் நின்று ஆக்சிஜனை பெற்று வருகிறேன். மேலும் எனது தொடர்பு எண் சமூக ஊடகங்களில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் ஆம்புலன்ஸ் இல்லை என்றால் என்னை அழைக்கலாம்.  20 நாட்களாக இந்த சேவையை செய்து வருகிறேன். ஒன்பது தீவிர கொரோனா நோயாளிகளை இதுவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளேன் என்றும், இந்த சேவையில் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவதால், இந்த நாட்களில் தனது குடும்பத்தினருக்காக நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரது செயலால் அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்