4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!

Suchana Seth - 4 year old boy murdr case in Goa

பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின்  CEO சுசனா சேத் எனும் பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்று, கடந்த ஞாயிறு நள்ளிரவில் வாடகை டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டார். விடுதிக்கு வரும்போது இருந்த மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் கோவா போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.

கால் டாக்சி ஓட்டுனர் ரே ஜானை தொடர்பு கொண்டு, சுசானா சேத்தை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீஸ் மூலம் கோவா போலீசார் கைது செய்தனர் . அவர் கொண்டு வந்த சூட்கேசில் 4 வயது மகனின் சடலம் இருப்பதும் கண்டறியப்பட்டது . இதனை அடுத்து கொலை, கொலைக்கான ஆதாரத்தை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுசானா சேத்தை கோவா போலீசார் கைது செய்தனர். கடந்த செவ்வாய் காலையில் சுசானா சேத் கோவா அழைத்து வரப்பட்டார்.

4 வயது மகனை கொலை செய்ய சதித்திட்டம்.! பெண் CEOவிடம் வேறு விதமான விசாரணை…

தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் சுசானா சேத்திடம் காவல்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் தனது மகனை கொலை செய்யவில்லை என்றும், தனது சூட்கேஸ் எடை அதிகமானதை நான் கவனிக்கவில்லை என்றும், தனது மகன் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்கையில் உயிரிழந்துவிட்டான் என்றும் பல்வேறு வாக்குமூலங்களை சுசானா சேத் கோவா போலீசாரிடம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

தற்போது சுசானா சேத்தை கைது செய்ய பெரிதும் உதவிய கால் டாக்சி ஓட்டுநர் ரே ஜான் கூறுகையில், சுசானா சேத், தன்னை கோவா தனியார் விடுதியில் இருந்து தொடர்பு கொண்டார் என்றும், வரும் போது ஒரு பெரிய சூட்கேஸ் வைத்து இருந்தார். அந்த சூட்கேஸ் மிகவும் கனமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

அந்த கனமான சூட்கேஸில் உள்ள பொருட்களை வேறு பெட்டிக்கு மாற்றினால் எடை குறையும் என தான் கூறியதாகவும், ஆனால் அதனை சுசானா சேத் மறுத்துவிட்டார் என்றும் ரே ஜான் கூறினார். மேலும், தான் கோவாவில் இருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட 10 மணிநேர பயணத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக வந்துகொண்டு இருந்தார் என்றும் இடையில், ஒருமுறை தண்ணீர் பாட்டில் கேட்க மட்டுமே பேசினார் என்றும் ரே ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடகா-கோவா எல்லையில் உள்ள சோர்லா காட் பிரிவில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீரமைக்க குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும் என போலீசார் அவரிடம் தெரிவித்தனர். நான் நேரத்தை மிகைப்படுத்தி, சாலையை சுத்தம் செய்ய ஆறு மணி நேரம் ஆகும் என்று சுசானா சேத்திடம் சொன்னேன், நாங்கள் திரும்பி விமான நிலையத்திற்குச் செல்லலாம் என்று பரிந்துரைத்தேன். ஆனால் சுசானா சேத் சாலை வழியாக செல்லவே என்னிடம் கூறினார், பின்னர் கோவா காவல்துறையினரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், சுசானா சேத் மீது சந்தேகம் இருப்பதாக எச்சரித்ததாகவும் டாக்ஸி டிரைவர்  ரே ஜான் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்