ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! நடத்துநரின் துரீத செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!

நிலைதடுமாறி ஓடிய பேருந்தை, நடத்துநர் விரைவாக நிறுத்தி பெரும் விபத்து தவிர்த்துள்ளார், இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Banglore Bus Conductor Saves Passenger from Accident

பெங்களூரு : ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலை தடுமாறி ஓடிய பேருந்தை தனது சாமர்த்தியமான செயலால் நடத்துநர் நிறுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும், தனது துரீத செயலால் பேருந்தை நிறுத்தி பயணம் செய்த பயணிகளின் உயிரைக் காப்பற்றிய நடத்துநருக்கு பலரும் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை (நவ-4) அன்று பெங்களுருவில் யஷ்வந்த்பூர் என்னும் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், ‘அரசு பேருந்தை 40 வயதான கிரண் ஒட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே சரிந்திருக்கிறார்.

இதனால், அவர் ஓட்டிக் கொண்டிருந்த போது பேருந்து நிலை தடுமாறி சாலையில் ஓடி இருக்கிறது. இதனை முன்கூட்டிய கவனித்த அந்த பேருந்தின் நடத்துநர் சற்றும் யோசிக்காமல் சாமர்த்தியமாக ஓட்டுநர் இருக்கைக்கு சென்று பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி இருக்கிறார்.

இந்த சாமர்த்தியமான செயலை செய்து அப்பேருந்தில் பயணித்த பல பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய அந்த நடத்துநருக்கு அந்த பேருந்தின் பயனர்களும், அந்த வீடீயோவை கண்ட நெட்டிசன்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் மறுப்பக்கம் ஓட்டுநர் ஏற்பட்ட அந்த திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்