16,000 பேருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!
இதுவரை சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் காந்தி மாரடைப்பால் மரணம்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் காந்தி, இவருக்கு வயது 41. இவர் பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். இதுவரை சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் வழக்கம் போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று உறங்கியவர் மறுநாள் காலை சுயநினைவின்றி இருந்துள்ளார். மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்துள்ளனர். 16,000 பேரின் உயிரை காப்பாற்றிய மருத்துவரின் உயிரிழப்பு மருத்துவ வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.