9 முறை பிளாஸ்மா தானம் செய்து 18 நோயாளிகளுக்கு உதவிய மருத்துவர்…!
9 முறை பிளாஸ்மா தானம் செய்து 18 நோயாளிகளுக்கு உதவிய மருத்துவர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக கழுவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினசரி இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் மணிப்பால் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீகாந்த் கடந்த ஆண்டு கொரோனாவில் இருந்து மீண்டு 3 முதல் 4 வாரங்களுக்கு ஒரு முறை தனது பிளாஸ்மாவை தானம் செய்து வருகிறார். இவர் தனது பிளாஸ்மாவை தானம் செய்வதற்கு முன் ஸ்பைக் புரத ஆண்டிபாடி பரிசோதனை செய்து கொள்கிறார்.
இதுவரை புரத அளவு தேவையான அளவைவிட குறைவாக இருந்ததில்லை அதைவிட அதிகமாக தான் காணப் படுவதாகக் கூறியுள்ளார். 3 முதல் 4 வாரங்களுக்கு ஒரு முறை பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கும் இவர், இதுவரையில் 9 முறை அவ்வாறு பிளாஸ்மா நன்கொடை அளித்துள்ளார். இதன் மூலம் 18 நோயாளிகளுக்கு அவர் உதவியுள்ளார் என கூறப்படுகிறது.
நன் கொடையாக அளிக்கப்பட்ட பிளாஸ்மாவின் ஒரு அலகு 200 மில்லி லிட்டர் என்றும் இதனை இரண்டு நோயாளிகள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.