மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

Andhra Pradesh - Boy CollapsesAndhra Pradesh - Boy Collapses

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் (சாய்) சுயநினைவை இழந்து மயக்கமடைந்தான். பின்னர் அந்த சிறுவனை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, அந்த வழியாக ரவளி என்ற சென்ற பெண் மருத்துவர், தயக்கமின்றி அந்தச் சிறுவனுக்கு சாலையில் படுக்க வைத்து சிபிஆர் (CPR) செய்தார். CPR என்றால், ஒருவருக்கு இதய சுவாச முடக்கம் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்யப்படும் cardio pulmonary resucitation எனும் முதல் உதவி தான்.

மருத்துவர் ரவளி சரியான நேரத்தில் தலையிட்டு, CPR சிகிச்சை செய்ததால் அந்த சிறுவனின் சுய நினைவு திரும்பியது. பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்பொழுது, சிறுவன் குணமடைந்து தற்போது நலமுடன் உள்ளார்.

மருத்துவர் ரவளி CPR செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ரவளியின் இந்த செயல் சமூக வலைதளங்கள் முழுவதும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்