காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர் – ராகுல் காந்தி
காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது என ராகுல் ட்வீட்.
உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது.’ என பதிவிட்டுள்ளார்.
जिसे हिरासत में रखा है, वो डरती नहीं है- सच्ची कांग्रेसी है, हार नहीं मानेगी!
सत्याग्रह रुकेगा नहीं।#FarmersProtest
— Rahul Gandhi (@RahulGandhi) October 5, 2021