தன்னலமின்றி உழைத்த சாந்தி தேவியின் மறைவு வேதனையளிக்கிறது – பிரதமர் இரங்கல்!

Default Image

தன்னலமின்றி உழைத்த சாந்தி தேவியின் மறைவு வேதனையளிக்கிறது என பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக சேவகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்தி தேவி அவர்கள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஒடிசா மாநிலம் குனுபூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சாந்தி தேவி காலமாகியுள்ளார்.

இவரது மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக விளங்கியவர் சாந்திதேவி. கவலைகள் அற்ற ஆரோக்கியமான மற்றும் உன்னதமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தன்னலமின்றி உழைத்தவர் சாந்தி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்