“சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடம்” – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்..!
முன்னாள் எம்பி சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“சந்தன் மித்ரா ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக அவரது புகழ் சேர்க்கப்பட்டது. இந்தி இதய நிலம் மற்றும் அதன் வரலாறு பற்றிய அவரது புரிதல் ஆழமானது. அவரது மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் வெற்றிடத்தை உருவாக்குகிறது.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
Shri Chandan Mitra was an outstanding journalist and his stint as a parliamentarian added to his reputation. His understanding of Hindi heartland and its history was profound. His demise leaves a void in Indian journalism. My heartfelt condolences to his family and friends.
— President of India (@rashtrapatibhvn) September 2, 2021