டெல்டா வகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய பகுதிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது – WHO

உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஐரோப்பிய பகுதிகளில் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ், தற்பொழுது ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் இந்த உருமாறிய வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 28 ஐரோப்பிய நாடுகளில் 19 நாடுகளில் இந்த டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸால் ஆல்பா வகை வைரஸை விட அதிகம் பரபி உள்ளதாகவும், ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இந்த டெல்டா வகை வைரஸ் பரவல் இருப்பதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் அடுத்த சில வாரங்களில் இந்த டெல்டா வகை வைரஸின் ஆதிக்கம் உலகம் முழுவதிலும் வெளிப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024