#Breaking : டெல்லி மேயர் பொறுப்பை முதன் முறையாக கைப்பற்றிய ஆம் ஆத்மி.!

Default Image

டெல்லி மேயர் தேர்தல் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்று டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களையும் பாஜக 104 இடங்களையும்  காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றின. வழக்கமாக மாநகராட்சி மேயர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பது வழக்கம்.

மாமன்றத்தில் அமளி : ஆனால் டெல்லி துணை நிலை ஆளுநர் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே மேயர் தேர்தலில் வாக்களிக்கும் படி புதிய நடைமுறையை கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளாட்சி மன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் மேயர் தேர்தல் 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு : இதனை தொடர்ந்து துணைநிலை ஆளுனர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களே வாக்களிக்க வேண்டும் என தீர்ப்பு வந்ததை அடுத்து இன்று டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் வாக்கு செலுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர் 9 பேர் மட்டும் இந்த தேர்தலை புறக்கணித்தனர்.

ஆம் ஆத்மி வெற்றி : தற்போது 241 உறுப்பினர்கள் வாக்களித்த டெல்லி மேயர் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதில், அதிக உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி வேட்பாளர் ஷைலி ஓபராய் பாஜகவின் ரேகா குப்தாவை தோற்கடித்தார். இதன் மூலம் முதன் முறையாக டெல்லி மாமன்ற மேயர் பதவியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்