“வருகின்ற 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்”- அரசு அதிரடி அறிவிப்பு!
டெல்லி:வருகின்ற 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை முதல் டெல்லியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற 29.11.2021 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்படும்”. என அறிவித்துள்ளார்.
All the Schools in Delhi will reopen from 29.11.2021 for all classes. pic.twitter.com/wOHR7Y9CJ9
— Manish Sisodia (@msisodia) November 27, 2021