டெல்லி:இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு.
இ-சைக்கிள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 7500 மானியம் மற்றும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.மேலும்,பயணிகள் இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 1,000 பேருக்கும் ரூ.2,000 கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ-சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு அரசு மானியம் வழங்கும் என்று கூறிய கைலாஷ் கெஹ்லோட்,கார்கோ இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 5,000 பேருக்கு தலா ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மானியம் முன்பு இ-கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது,ஆனால் தற்போது இ-சைக்கிள்களை வாங்கும் ஒரு நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ரூ.30,000 மானியம் வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்,டெல்லியில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த மானியத் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள் என்றும்,டெல்லியின் நகர சாலைகளில் தற்போது 45,900 இ-வாகனங்கள் இயங்கி வருவதாகவும்,அதில் பதிவு செய்யப்பட்ட மொத்த இ-வாகனங்களின் சதவீதம் 12 சதவீதத்தை தாண்டியுள்ளது என்றும் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…