#Breaking:வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – அரசு அவசர அறிவிப்பு!
டெல்லி:கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று பரவலும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக,டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில்: “டெல்லியில் கடந்த 8-10 நாட்களில் சுமார் 11,000 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன.அதில் சுமார் 350 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும்,124 நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது மற்றும் 7 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,கொரோனா பரவலைத் தடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டெல்லியில் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.எனவே,அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் தவிர அனைத்து அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் எனவும்,தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
DDMA has decided to impose a curfew in Delhi on Saturdays and Sundays to curb COVID surge. All govt officials except for those engaged in essential services will work from home. 50% workforce of private offices will work from home: Delhi Deputy CM Manish Sisodia https://t.co/AhRHujg6BF pic.twitter.com/PM47VVE5kG
— ANI (@ANI) January 4, 2022