பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய டெல்லி முதல்வர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், நேற்று, டெல்லிக்கு 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திராமோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நேற்று 730 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வழங்கியதற்காக டெல்லி மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தினமும் அதே அளவு ஆக்ஸிஜனை டெல்லிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என எழுதியுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…