அசரவைக்கும் ஆளில்லா குட்டி ருஸ்தம்-சோதனை வெற்றி!டிஆர்டிஓ நெகிழ்ச்சி
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ருஸ்தம்2 என்ற ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாகப் பறக்கச்செய்யும் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.
ருஸ்தம்-2 ஆளில்லா குட்டிவிமானத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்து உள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ருஸ்தம் 2வை கர்நாடக மாநிலம் சித்ரதுர்க்க மாவட்டத்தில் அமைந்துள்ள விமானவியல் ஆய்வு மையத்தில் ருஸ்தம்-2 ஆளில்லா குட்டி விமானத்தைச் சோதித்துள்ளனர்.சுமார் 16,000 அடி உயரம் வரை செல்லும் விமானம் தொடர்ந்து 8 மணி நேரம் வானில் வட்டமடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக வானில் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக பறக்கசெய்து சோதித்துள்ளது.மேலும் ருஸ்தம் விமானத்தில் ரேசார், உளவுக்கருவிகள் விழிப்புணர்வுக்காக தகவல் அறிவிப்புக் கருவிகள் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்லும் வகையில் திறன் பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.