தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு.! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய மஹேந்திர சிங் தோனி கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாட்டு போட்டியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட குழுவில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இடம்பெற்று இருந்தார்.
FIFA உலகக்கோப்பை 2026… அட்டவணை வெளியானது..!
அப்போது ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் பேசிய சம்பத்குமார், எஸ்.தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டது போன்ற கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில், தோனி பற்றி தவறான, அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக வழக்கு தொடரப்பட்டு, 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரப்பட்டு வழக்கு தொடரப்பட்டு இருந்தது
இந்த வழக்கு விசாரணையின் போது , விசாரணை குழு அறிக்கையில் உள்ள தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் சம்பத் குமார். இதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், அதன் வழக்கு விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பத் குமாருக்கு எதிராக தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சம்பத்குமாருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், மேல்முறையீடு செய்ய எதுவாக 30 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சம்பத் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னர் வருகையில், சம்பத் குமாருக்கு உயர்நீதிமன்றம் அளித்த 15 நாள் சிறை தண்டனை தற்போது நிறுத்திவைக்கப்படுவதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மகேந்திர சிங் தோனி பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.