கேரளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 பேர் ஆக உயர்ந்தது.!
கேரள மாநிலத்தில் இன்று 9,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு 2,89,202 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனாவிலிருந்து 8,924 பேர் குணமடைந்தனர். இதனால், இதுவரை 1,91,798 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், கொரோனா பாதிப்பால் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் 96,316 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.