ஆம்பன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுமென மேற்குவங்க மாநில முதல்வர் தெரிவித்தார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், நேற்று மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த கொல்கத்தா விமான நிலையமே நீரில் மூழ்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள் சேதமடைந்துள்ளதாக விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலால் மரங்கள், மின் கம்பங்கள், வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது ஆம்பன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…