உத்தரகாண்ட்டில் மின்சாரம் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி பகுதியில் மின்மாற்றி வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 15 உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி பகுதியில் மின்மாற்றி வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அலக்நந்தா ஆற்றங்கரையோரம் ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல் படையினர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.