பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு – கனிமொழி
பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு. பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் அளித்தவர். எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர்.
தலைவர் கலைஞருடனான இவரின் ஆழ்ந்த நட்பை நாடே அறியும். நான் எம்.பியாக பணியாற்றிய சமயத்தில், இவரோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மூத்த பாராளுமன்றவாதியாக, பல்வேறு ஆலோசனைகளை கூறி வழிநடத்தியுள்ளார். சிறந்த நிதியமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பறியது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு என் இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.