முன்னாள் மத்திய மந்திரியின் மகன் மரணம் ..!
முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் பண்டாரு தத்தாத்ரேயா. இவரது மகன் வைஷ்ணவ் (வயது 21).
ஐதராபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு உணவு சாப்பிட்டபின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக முஷீராபாத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அதிகாலை 1.30 மணியளவில் அவர் மரணமடைந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் ஐதராபாத் மேயர் பொந்து ராமமோகன் மருத்துவமனைக்கு சென்றார்