மும்பையில் 15 வயது சிறுமி தனது தாயை கராத்தே பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மும்பையில் ஜூலை 30 அன்று ஐரோலியில் இந்த சம்பவம் நடந்தது. 15 வயது சிறுமியின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகவும், தாய் ஒரு இல்லத்தரசியாகவும் உள்ளனர். சமீபத்தில், அந்த சிறுமி 10 வது தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனால், சிறுமியின் பெற்றோர் அந்த சிறுமி ஒரு டாக்டராக வேண்டும் என்று விரும்பினர்.
மேலும், நீட் வகுப்புகளில் அந்த சிறுமியை சேர்த்தனர். ஆனால், அந்த சிறுமிக்கு மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பவில்லை. இதன் காரணமாக அவளுக்கும், அவரது தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த ஜூலை 27 அன்று, சிறுமியின் தந்தை தனது மொபைல் போனில் விளையாடியதற்காக சிறுமியை திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மாமாவின் வீட்டிற்கு சென்றார்.
பின்னர், சிறுமியை தங்கள் வீட்டிற்கு அவரது தாய் அழைத்து வந்துள்ளார். ஆனால், சிறுமியை நீட் தேர்விற்கு தொடர்ந்து படிக்க பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்த காரணத்தால், கடந்த ஜூலை 30 அன்று மதியம் 2 மணியளவில் சிறுமியின் தாயுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, சிறுமியின் தாய் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால், தனது தாய் தன்னை கொல்லப் போகிறாள் என்று பயந்து, அந்த சிறுமி தனது தாயை தள்ளி உள்ளார். அப்போது, அவரது தாய் அருகில் இருந்த கட்டிலின் கால் பகுதியில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
அரை மயக்க நிலையில் இருந்த அவர் அருகில் கிடந்த கராத்தே பெல்ட்டைப் பிடிக்க முயன்றார். அதைப் பார்த்ததும், சிறுமி பெல்ட்டைப் பிடித்து, தன் தாயைக் கழுத்தை நெரித்து கொன்றதாக என்று காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறுமி மைனர் என்பதால் கைது செய்யப்படவில்லை.
தங்கள் குழந்தைகளுக்கு படிக்க அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்திய காவல்துறை அதே வேளையில், பெற்றோர்கள் அவளுடைய எதிர்காலத்திற்காக தான் படிக்கச் சொல்கிறார்கள் என்று குழந்தைகள் புரிந்தகொள்ள வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…