கொரோனாவையும் இப்படி தான் விரட்ட வேண்டும்…! மகளை செருப்பால் அடித்து விரட்டிய தந்தை…!

Default Image

தந்தையை பிரிய மனமில்லாமல், மீண்டும், மீண்டும் ஓடி வந்த மகளை செருப்பால் அடித்து விரட்டியடித்த தந்தை. 

பொதுவாகவே பெண்களை பொறுத்தவரையில், திருமணத்திற்கு பின் தாய், தந்தையை விட்டு பிரிந்து செல்வது சற்று வேதனையான ஒன்றாக தான் கருதுவர். அந்த வகையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா சூழலுடன் தொடர்புப்படுத்தி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது கொரோனாவை விரட்டு போது, செருப்பால் அடித்து விரட்டுவோம் என்ற கருத்தை முன்வைத்து, ஒரு வேடிக்கையான வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு திருமணமான பெண்ணை அவரது தந்தை மற்றும் உறவினர்கள், கிராமத்தின் எல்லைக்கு வந்து வழியனுப்பி வைக்கிறார்கள். தான் கணவனுடன் செல்லும் அப்பெண், தந்தையை பிரிய மனமில்லாமல், மீண்டும் தந்தையிடம் ஓடி வருகிறாள். அவளை கட்டியணைத்து வழியனுப்பி வைக்கிறார் தந்தை. பின் மீண்டும், மீண்டும் அப்பெண் ஓடி வந்ததையடுத்து, கோபமடைந்த தந்தை, அவரது செருப்பை கழற்றி, அவளை செருப்பால் அடித்து விரட்டியடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்