மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள்!
பள்ளி சென்றுவிட்டு இரவில் பாத்திரம் தேய்த்தவரும், ஆட்டோ ஓட்டுனரின் மகளுமாகிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த மன்யா சிங் மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் குஷி எனும் நகரில் வசித்து வரும் சாதனை பெண்மணி தான் மான்யா சிங். இவரது தந்தை அவுட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் மான்யா. தந்தையின் வருமானம் பற்றாததால், மான்யா காலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய பின் சில வீடுகளில் இரவு வரை பாத்திரம் தேய்ப்பாராம்.
இரவில் கால் செண்டரில் பணியாற்றியபடி தான் படிப்புகளை முடித்துள்ளார். இவ்வளவு வறுமையிலும் மான்யா வாழ்க்கையில் வெற்றி பெற்று தான்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என நினைத்து தான் மிஸ் இந்தியா 2020 போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவரது நம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் பலனாக தன இவர் மிஸ் இந்திய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.