மாமியாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய மருமகள்.
ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தீபக் – நிகிதா தம்பதியினர். தீபக்குடன் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் இவர்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், மாமியார் – மருமகள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், நேற்று முன்தினம் நிகிதாவின் கணவர் தீபக் வேலைக்கு சென்றுள்ளார். மாமனார் ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், நிகிதா மற்றும் ரேகா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாமியார் ரேகா, 4 மாத கர்ப்பமாக உள்ள நிகிதாவை பார்த்து, வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் தான் காரணம் என்றும், மாமனாருடன் தவறான தொடர்பை நிகிதா வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நிகிதா மாமியார் ரேகாவை இரும்பு கம்பியால், சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ரேகாவின் உடலில் தீ வைத்துள்ளார். இருவரின் சத்தம் கேட்ட அக்கம் பாக்கத்தினர் நிகிதாவின் கணவர் தீபக்கிற்கு போன் செய்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக வீட்டிற்கு வந்த தீபக், வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது, ரேகா இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், நிகிதா தான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போலீசார் நிகிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…