Categories: இந்தியா

மேடையில் உயிருடன் கோழியை கடித்துக் கொன்ற நடனக் கலைஞர்! வைரல் வீடியோ…

Published by
கெளதம்

ஆந்திரப் பிரதேசம்: அனகப்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி மேடையில் வைத்து கோழியை உயிருடன் கடித்துக்கொன்ற நடனக் கலைஞர் விஷ்னு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது கோழியின் தலையை கடித்து நடனக் குழு நடனமாடியதைக் காட்டும் வீடியோ வெளியானதால் சர்ச்சை தொடங்கியது. வீடியோவில், நடுவில் நடனக் கலைஞர் ஒருவர், சிவப்பு நிற சேலை அணிந்த ஒரு கோழியை தூக்கிச் செல்லும் போது, ​​அந்த குழு மேடையில் நடனமாடுவதைக் காணலாம்.

அப்போது, நடனக் கலைஞர் முன்னால் வந்து அந்த கோழியின் தலையைக் கடித்து ஆக்ரோஷத்துடன் துப்புகிறார், ரத்தம் தெறிக்கும்படி அமைந்திருக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது.

குழந்தைகள் உட்பட பெரியவர்கள் முன்னிலையில் கோழியை கடித்து கொன்றது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், நடனக் குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் கோழியின் தலையை கடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், PETA அமைப்பு போலீசில் புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

4 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

4 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

5 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

5 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

6 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

7 hours ago