கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (டிஏ) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர்,2019 ஆம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது.பின்னர்,2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும்,2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது.இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் இதுவரை செலுத்தப்படவில்லை.
இந்நிலையில்,மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.அதாவது,ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
மேலும்,இதுகுறித்து,ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் பணியாளர் நல செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில்: “மத்திய அரசு ஊழியரின் டி.ஏ.ஆனது தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து ,குறைந்தபட்சமாக 28 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில்,ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது 7 வது சிபிசி பொருத்துதல் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
எனவே,ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) போன்ற மாத பங்களிப்பு ஜூலை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,ஏழாவது ஊதிய கமிஷன் பொருத்துதல் காரணியை,அடிப்படை சம்பளத்தை பொருத்துதல் காரணியுடன் பெருக்கி,அதாவது,ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 என்றால், அவரது சம்பளம் 18,000 x 2.57 = ரூ. 46,260 ஆகும்.எனவே,அந்த வகையில் மாதாந்திர அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படும்”,என்று கூறினார்.
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…