கொரோனா பரவல் எதிரொலி;டெல்லி சர்வதேச விமான நிலையம் மூடல்..!
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையம் மே 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும்,கொரோனா இரண்டாவது அலை பரவலின் காரணமாக விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் வருகை பெரும் அளவில் குறைந்ததால், விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
இதனால்,டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையம் மே 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று பி.டி.ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,டெல்லி விமான நிலையத்தில் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 325 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.ஆனால்,கொரோனா பரவலுக்கு முன்பு,தினமும் 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், கடந்த சில வாரங்களில்,உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 2.2 லட்சத்திலிருந்து 70,000 ஆக குறைந்துள்ளது என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Domestic aviation operations continue!
More than 70,000 passenger arrivals took place at airports across the country on 10th May. Please take all possible precautions for ensuring a safe travel experience for yourself and others. #SabUdenSabJuden #Unite2FightCorona pic.twitter.com/PxEAVvebRI
— MoCA_GoI (@MoCA_GoI) May 11, 2021