தாயுடன் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்!
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கேரள பகுதியில் உள்ளது பாம்பாறு. இந்த பாம்பாறு ஆற்றை, தாய் யானையுடன் இணைந்து குட்டியானையும் கடக்க முயன்றுள்ளது. அப்போது குட்டியானை எதிர்ப்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத்துறையினர், குட்டி யானையை கயிறு கட்டி மீட்டு, வனத்துறை முறைப்படி அடக்கம் செய்தனர். குட்டி யானை நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.