கோவாக்சின் தடுப்பூசி 78% செயல் திறன் உள்ளது – மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்!

பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டதாக அந்நிறுவனம் தனது மூன்றாம் கட்ட பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செயல்திறன் குறித்த சோதனை முடிவுகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து தேசிய மருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியுள்ளது.
ஏற்கனவே அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று கோவாக்சின் நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாம் கட்ட தரவுகளை ஒப்புதல் அளிக்கப்பட்டால் விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் தங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025