பொதுமக்களின் உணவுப் பழக்கங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது-உச்சநீதிமன்றம்.!

ஹலால் முறையில் மிருகங்கள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான இன்று விசாரணை நடைபெற்றது. அதில், பொதுமக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என நீதிமன்றம் தலையிட முடியாது.
அசைவம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்கள் என பிரித்து பார்க்க முடியாது. மக்கள் எந்த உணவுகளை விரும்புகிறார்களோ அந்த உணவை தாராளமாக சாப்பிடலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், பொதுமக்களின் உணவுப் பழக்கங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்தும் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.