கோடீஸ்வர கல்யாணம் : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை இன்று (ஜூலை 12-ம் தேதி) திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக விலை கொண்ட திருமணத்தின் சாதனையை இதற்கு முன் ஒரு ஜோடி செய்திருக்கிறது. ஆம், அந்த பெருமை வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமானது.
இன்று ம் நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி திருணம் தான், எல்லாரும் இது மிகவும் விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்று என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை விடவும் மிகவும் விலையுயர்ந்த திருமணமத்தை செய்து கொண்டு வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா ஜோடி உலக சாதனை படைத்துள்ளது.
அட ஆமாங்க… வனிஷா மிட்டல் திருமணம் 2004 ஆம் ஆண்டு பிரான்சின் வெர்சாய்ஸ் நகரில் ஆறு நாள் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் திருமண விழா பாரீஸ் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘Chateau Vaux le Vicomte’ இல் நடைபெற்றது. திருமண நிச்சயதார்த்தம் கூட வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்றது.
மிகவும் விலையுயர்ந்த இந்த திருமணத்தின் செலவு (55 மில்லியன் டாலர்) அப்போது இதன் மதிப்பு ரூ.240 கோடிக்கு மேல் என்று சொல்லப்டுகிறது. தற்போதைய ரூபாய் மதிப்பீட்டில் கணக்கிட்டால் ரூ.550 கோடிக்கு மேல் செலவாகும். பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது திருமணத்திற்கு செலவிட்டதை விட இது அதிகம் என்பது கூறப்படுகிறது. வனிஷா மற்றும் அமித் திருமணத்தின் சில சிறப்பம்சங்கள் ஈபிள் டவரில் பட்டாசு வெடித்தது குறிப்பிடத்தக்கது.
வனிஷா மிட்டல்
வனிஷா மிட்டல் உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டலின் மகள் ஆவார். அவர் தனது குடும்பத்தின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். வனிஷா லண்டனில் உள்ள ஐரோப்பிய வணிகப் பள்ளி மற்றும் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் (SOAS) ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.
அவர் ஆர்சிலர் மிட்டலில், குறிப்பாக பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான துறைகளில் பங்கு வகித்துள்ளார். அவர் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…