கழிவறையில் முதியவரை பூட்டி வைத்துவிட்டு, தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம்.
பெங்களூர், பானஷங்கரி 3-வது தெருவில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியநாயுடு (69). இவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் சிவசங்கர் மற்றும் நேகா என்றும், வாடகை வீடு தேடி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெரியவர் அவர்களுக்கு வாடகை மற்றும் டெபாசிட் குறித்து குறிப்பிட்டார். அப்போது கழிவறைக்கு சென்ற அந்த முதியவரை உள்ளே வைத்து பூட்டி விட்டு, அவரது வீட்டில் இருந்த 360 கிராம் தங்க நகைகள், வாட்ச், போன் மற்றும் டெபிட் கார்ட் என 15 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சில நிமிடங்கள் கழித்து, முதியவர் கழிவறையில் இருந்து சத்தமிட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த தம்பதியினரை தேடி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…