கழிவறையில் முதியவரை பூட்டி வைத்த தம்பதியினர்! தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம்!

Default Image

கழிவறையில் முதியவரை பூட்டி வைத்துவிட்டு, தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம்.

பெங்களூர், பானஷங்கரி 3-வது தெருவில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியநாயுடு (69). இவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் சிவசங்கர் மற்றும் நேகா என்றும், வாடகை வீடு தேடி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெரியவர் அவர்களுக்கு வாடகை மற்றும் டெபாசிட் குறித்து குறிப்பிட்டார். அப்போது கழிவறைக்கு சென்ற அந்த முதியவரை உள்ளே வைத்து பூட்டி விட்டு, அவரது வீட்டில் இருந்த 360 கிராம் தங்க நகைகள், வாட்ச், போன் மற்றும் டெபிட் கார்ட் என  15 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சில நிமிடங்கள் கழித்து, முதியவர் கழிவறையில் இருந்து சத்தமிட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த தம்பதியினரை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்