Categories: இந்தியா

2024-2025-இல் நாட்டின் பணவீக்கம் எப்படி இருக்கும்.? RBI ஆளுநர் பேட்டி.!

Published by
மணிகண்டன்

ரிசர்வ் வங்கி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் , 2024 – 2025ஆம் ஆண்டின் பணவீக்கம் பற்றி பல்வேறு தரவுகளை குறிப்பிட்டார். பணவீக்கமானது எந்தெந்த துறைகளில் எவ்வாறு இருக்கும் என கணித்து அதனை கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், நாங்கள் இப்போது பணவீக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் எனும் CPI பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் உணவுபொருட்கள் மீதான பணவீக்கமானது அதிகளவில் காணப்படுகிறது. அதனை எரிபொருள் உள்ளிட்ட மற்ற பொருட்களின் பணவீக்க அளவை கொண்டு இதனை ஈடுகட்டி வருகிறோம்.

ஓரளவு மிதமான நிலை இருந்தபோதிலும், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. சீசன் சரிவைத் தொடர்ந்து காய்கறிகளின் விலை கோடைகாலத்தில் உயர்வை சந்தித்தன. எரிபொருளின் பணபரிவர்த்தனை போக்கு முதன்மையாக மார்ச் தொடக்கத்தில் LPG விலைக் குறைப்புகளால் முன்னேறியது.

ஜூன் 2023 முதல் தொடர்ந்து 11வது மாதமாக நிலக்கரி பணவீக்கம் சற்று குறைந்து வருகிறது. சேவை துறைகளில் உள்ள பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.  பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் வெளிநாட்டு இறக்குமதியை கவனமாக கண்காணிக்க வேண்டும். உலக உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

தொழில்துறை உலோகங்களின் விலைகள் நடப்பாண்டில் இதுவரை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்தப் போக்குகள் நீடித்தால், பண்ணைகளுக்கான உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும். மறுபுறம், இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு வரும்கால வேளாண் பருவத்திற்கு நல்லதாக அமையும்.

கடந்த ஆண்டை விட கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது. உண்மையில், கோதுமை மற்றும் அரிசியின் தாங்கல் பங்குகள் குறிப்பிட்டதை விட அதிகமாக உள்ளன. இந்த முன்னேற்றங்கள் உணவுப் பணவீக்க உயர்வுக்கு, குறிப்பாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மீதான பணவீக்கத்திற்கு சற்று குறைய அமையலாம்.

உலகளாவிய அரசியல் பதட்டங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் மீதான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது. 2024-25க்கான CPI பணவீக்கம் 4.5% ஆகவும், முதல் காலாண்டில் 4.9% ஆகவும், இரண்டாம் காலாண்டில் 3.8% ஆகவும்,  மூன்றாம் காலாண்டில் 4.6% ஆகவும் மற்றும் நான்காம் காலாண்டில் 4.5% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் GDP வளர்ச்சிக் கணிப்பின் அளவு 7% லிருந்து 7.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கக் கணிப்பு ஓர் ஆண்டுக்கான சராசரி என கடந்த MPC கூட்டத்தில் ஆலோசித்து இருந்ததை போலவே, 4.5% ஆகத் தக்கவைத்துள்ளோம். நடப்பு ஆண்டிற்கான GDP கணிப்பு ஏன் அதிகரித்தது என்பதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…

6 minutes ago

குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

12 minutes ago

துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…

48 minutes ago

முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவர் ஆகுங்க பார்ப்போம்! எடப்பாடிக்கு சவால் விட்ட கருணாஸ்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

2 hours ago

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…

2 hours ago

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

4 hours ago