நவ-10இல் தென்னிந்தியாவில் அறிமுகமாகிறது நாட்டின் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் .!
சென்னை- மைசூர் வரை செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவ-10 ஆம் தேதி தொடங்கியிருக்கிறது.
நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகிறது. சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் வரை 483 கிமீ தூரம் செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 இல் கொடியசைத்து துவங்கப்பட இருக்கிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே சமீபத்தில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசங்களிலிருந்து அறிமுகப்படுத்தியது. நேற்று வியாழக்கிழமை நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள அம்ப் அண்டௌரா ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் உனா, சண்டிகர் மற்றும் புது டெல்லி இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டது. வந்தே பாரத் 2.0 ரயில்களில், முந்தைய ரயில்களில் இல்லாத ‘கவாச்’ எனப்படும் ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மணிநேர பேட்டரி பேக்அப் கொண்ட பேரழிவு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலின் வெளிப்புறத்தில் எட்டு பிளாட்ஃபார்ம் பக்க கேமராக்கள் உள்ளன. மேலும் தானியங்கி குரல் பதிவு அம்சத்துடன், பயணிகள்-பாதுகாப்பு தகவல் தொடர்பு வசதியும் பெட்டிகளில் பொருத்தப்பட்டு உள்ளது.