கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம்
கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய மருத்துவ சங்கம்.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ஆயுர்வேதத்தைச் சேர்ந்த கொரோனிலை பதஞ்சலி அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் செயல்திறன் குறித்து அறிவியல் சான்றுகள் இல்லாததால் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதன் பின் கடந்த 19-ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு 100% குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என பதஞ்சலி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் உலக சுகாதார அமைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.அதாவது, கொரோனா சிகிச்சைக்காக எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்யவில்லை என்றும் அதற்கு சான்றளிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
பதஞ்சலியின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா இது குறித்து அளித்த விளக்கத்தில் “கொரோனிலுக்கு இந்திய அரசாங்கத்தின் டி.சி.ஜி.ஐ அனுமதி வழங்கியுள்ளது .ஆனால் உலக சுகாதார அமைப்பு வழங்கவில்லை என்று கூறினார். ஆனால் கொரோனில் கிட் என்ற மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது என்ற செய்தி வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.பதஞ்சலியின் கொரோனில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருந்து என்று நிறுவனம் கூறுவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பதால், இதுபோன்ற பொய்யான புனையப்பட்ட விஞ்ஞானமற்ற உற்பத்தியை முழு நாட்டு மக்களுக்கும் வெளியிடுவது எவ்வளவு நியாயமானது .கால அளவை நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா? ,இந்த நாட்டிற்கு அமைச்சரிடமிருந்து ஒரு விளக்கம் தேவை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
IMA HQs Press Release on Health Minister – February 22, 2021 pic.twitter.com/72DWWs90KG
— Indian Medical Association (@IMAIndiaOrg) February 22, 2021