‘நாடே மகிழ்ச்சியாக உள்ளது’ – இந்தியாவில் என்ன நடக்கிறது? என நட்டாவிடம் விசாரித்த பிரதமர் மோடி..!
வெளிநாட்டு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, இந்தியாவின் நிலை குறித்து ஜெ.பி.நட்டாவிடம் விசாரித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அவரது மூன்று நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து எகிப்த்திற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். தனது 2 நாட்கள் எகிப்து பயணத்தை முடித்து, தற்போது மீண்டும் இந்தியா வந்தடைந்தார் புதுடெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அமெரிக்கா, எகிப்து சுற்றுப்பயணம் முடிந்து டெல்லியில் தரையிறங்கியதும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம், “இந்தியாவில் என்ன நடக்கிறது?” என பிரதமர் மோடி விசாரித்தார்; அதற்கு “9 ஆண்டுகால சாதனைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்; “நாடே மகிழ்ச்சியாக உள்ளது”, என நட்டா பதிலளித்துள்ளார்.