தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவிலான கொரோனா மருந்து 2DG விற்பனை வந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 2டிஜி புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதனை அடுத்து, இந்த புதிய தடுப்பு மருந்து, இன்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனை, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக பத்தாயிரம் பாக்கெட்டுகள் இன்று சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில், இந்த மருந்தினை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களும், வீட்டில் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…