நிறைமாத கர்பத்துடன் பெண்மணி உருவாக்கிய கொரோனா கண்டறியும் கருவி – குவியும் பாராட்டுக்கள்!
தற்பொழுது கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் மக்கள் இதுகுறித்து அச்சத்தில் இருந்தாலும், சிலர் இதற்கான கண்டுபிடிப்புகளையும் மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் மிக மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மின்னல் தாகவே என்ற நிறைமாத கர்ப்பிணி ஆகிய பெண்மணி கொரோனாவை கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை கருவியை உருவாக்கியுள்ளார்.
இவர் மைலாப் டிஸ்கவரி என்ற ஆய்வகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இது குறித்து பேசிய அவர், கொரோனா அதிகம் பரவி வருவதை அறிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் தன்னுடைய குழுவுடன் இணைந்து கடுமையான ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளார். அடுத்த நாளே பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், இவர் உருவாக்கிய கருவி தேசிய நோய்தொற்று துறையில் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, குழந்தை பிறந்த மறுநாளே இவரது கருவி சிறந்தது என்பது ஒப்புதல் பெற்ற பின்பு அவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம். கொரோனா தோற்று உள்ளதா? இல்லையா? என்பதை இரண்டரை மணி நேரத்தில் அறியக்கூடிய இந்த கருவியின் விலை வெறும் 1200 ருபாய் தானம்.
இதை நாம் வெளிநாட்டில் வாங்கினால் அதன் விலை 4500 ரூபாய் எனவே சிரமங்கள் இருந்தாலும் நாட்டு மக்களுக்காக சேவை செய்ததை நினைத்து மகிழ்கிறேன். தொடர்ந்து பணியாற்றுவேன் என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என கூறி உள்ளார்.