கொரோனா சவால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பெரியது – பிரதமர் மோடி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா சவால் பெரியது என்று பிரதமர் மோடி ஞ்சாயத்து ராஜ் திவாஸ் குறித்த விழாவில் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வாமித்வா’ திட்டத்தின் கீழ் இ-சொத்து கார்டுகளை விநியோகிப்பதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பஞ்சாயத்து ராஜ் திவாஸ் குறித்த விழா இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு கிராமப்புறங்களை பாதிக்காத வகையில் தொற்றுநோய் தடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா சவால் பெரியது என்றும், தொற்று நோய் கிராமங்களைத் தாக்காமல் எல்லா வகையிலும் தடுக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் யார் முதலில் வெற்றிபெறப் போகிறார்கள் என்றால், அது இந்தியாவின் கிராமங்கள் தான். கிராமங்களின் மக்கள் நாட்டிற்கான வழியைக் காண்பிப்பார்கள். கிராமங்களின் மந்திரம் “தவாய் பீ, கடாய் பீ” (மருந்து மற்றும் எச்சரிக்கையுடன்) இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களை கிராமங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள் தங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் எனவும் தெரிவித்தார். மே, ஜூன் மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்க முடிவு செய்துள்ளது. இது 80 கோடி மக்களுக்கு பயனளிக்கும். அரசாங்கத்திற்கு ரூ.26,000 கோடி செலவாகும் என குறிப்பிட்டார்.