” எல்லையில் தொடரும் போர் பதற்றம் “…. மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்…!!
- இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இன்று மாலை மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்நடைபெறுகின்றது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் ஏற்படுகின்றது.
இந்நிலையில் இந்திய ராணுவம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், அபிநந்தன் மீட்பது தொடர்பாகவும் , இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் போர் பதற்றத்தை தணிக்க அடுத்தகட்ட நடவடிக்கை உட்பட பல்வேறுவிஷயங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மாலையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.