மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
அண்மையில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக, எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாயிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்த அம்மாநில காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியானது, மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கம்னர், கோலாப்பூர், அவுரங்காபாத், அமராவதி, நாக்பூர் போன்ற நகர மையங்களிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் விவசாயிகளுக்கு நல்லதல்ல. மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒரு சிலருக்கு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் வருவாய் அமைச்சர் பாலாசாகேப் தோரத் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைய வசதியுடன் கிராமங்களுக்குச் செல்வார்கள். கிராமங்களில் ஒரே இடத்தில் விவசாயிகள் ஒன்று சேரும் பேரணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…